டெல்லியில் 42 வயது நபரை துப்பாக்கியால் தாக்கி கொள்ளையடித்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகிவுள்ளது.
டெல்லியில் உள்ள ரூப் நகரில் 42 வயது நபரை துப்பாக்கியால் தாக்கி அவரிடம் இருந்த ரூ.5 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத 4 பேர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பாதிக்க பட்ட நபர் கீர்த்தி நகரில் உள்ள பிளாஸ்டிக் கடையில் வியாபாரியாக பணிபுரிகிறார்.
இவர் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் அவரின் வலது காலில் துப்பாக்கியால் தாக்கி ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் காயமடைந்த அந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல்துறையினர் கொள்ளையடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
unknown node