மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகத்தின் பெயரில் மாயோ பொது மருத்துவமனையில் தனி வார்டில் சிகிக்சை பெற்று வந்த ஐந்துபேர் தப்பி சென்று உள்ளனர். பின்னர் அவர்களை போலீசார் பிடித்துள்ளனர்.
இது குறித்து நாக்பூர் போலீஸ் துணை ஆய்வாளர் எஸ்.சூர்யவன்ஷி கூறுகையில் ,தப்பிய ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. மேலும் மற்ற நான்கு பேரின் அறிக்கைகள் வரவில்லை. வந்த பிறகே அவர்களுக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறது என கூறமுடியும் என கூறினார்.
நாக்பூரில் 16 பேர் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா வைரஸ் பாதிப்பு கருத்தில் கொண்டு மும்பை, தானே, புனே, நாக்பூர் ஆகிய நகரங்களில் மக்கள் அதிகமாக கூடும் தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களை மூட மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…