டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு மீண்டும் இயக்கப்பட்ட விமானத்தில் 5 வயது சிறுவன் தனியாக பயணித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் தற்போதுவரை 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பஸ், ரெயில், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை மீட்டு வருவதற்காக மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. 4-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், உள்நாட்டு விமான போக்குவரத்து 25-ம் தேதி நேற்று முதல் இயக்கப்பட்டது.
மேலும், விமானத்தில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முகலவசம் அணியவேண்டும் என்றும் ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. அதன்படி, மேற்கு வங்கம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களில் விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மஞ்சித் ஷர்மா என்ற பெண்ணின் 5 வயது மகன் விவான் ஷர்மா, கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் உள்ள அந்த சிறுவனின் பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தார்.
திடீரென நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டதால், விமான சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் நிறுத்துவைக்கப்பட்டது. இதனால், தாயை பிரிந்து, 3 மாதம் பாட்டி வீட்டில் தங்கினார் அந்த சிறுவன். நேற்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கியதால், டெல்லியில் இருந்து பெங்களுருவுக்கு இயக்கப்பட்ட விமானத்தில் தனியாக பயணித்தார். வயதான தாத்தா, பாட்டி அந்த சிறுவனுடன் பயணிக்க விமான விதிகள் இடமளிக்காத நிலையில், உறவினர்கள் யாருமின்றி தனியாக பெங்களூருவுக்கு விமானத்தில் சிறுவன் வந்து சேர்ந்தான். மூன்று மாதங்களுக்கு பிறகு மகனை சந்தித்த தாய், கண்ணீருடன் தனது மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…