கேரளாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இது குறித்த அறிவிப்புகளை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தினமும் மாலை செய்தியாளர் சந்திப்பில் நேரலையில் வெளியிட்டு வருகிறார் .
இதுகுறித்து நேற்று தெரிவிக்கையில் கேரளாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் குழந்தைகள் கவலை , மன அழுத்தம் போன்ற பலகட்ட சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.இதனால் மார்ச் 25 முதல் இதுவரை 66 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும், இதுகுறித்து ஆய்வு செய்ய மாநில அரசு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.ஸ்ரீலேகா தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளதாக தெரிவித்தார்.
கேரளாவில் நேற்று மட்டும் 339 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதுதான் அங்கு ஒருநாளில் பதிவான எண்ணிக்கையில் அதிகபட்சமாகும் .இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,534 ஆக அதிகரித்துள்ளது .
இது சமுதாய பரவல் அச்சுறுத்தலுக்கு மாநிலம் “மிக நெருக்கமாக” இருக்கிறது என்றார் .நேற்று (வியாழக்கிழமை) 149 பேர் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர், 2,795 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…