#Breaking:கார் விபத்து:பாஜக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா:வரதா அருகே பாலத்திலிருந்து கார் கீழே விழுந்ததில் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம்,செல்சுரா அருகே பாலத்தில் இருந்து கார் விழுந்ததில் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உட்பட 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த ஏழு இளைஞர்களும் சங்வியில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் வார்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது,அவர்கள் பயணித்த வாகனம் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.முதற்கட்ட தகவல்களின்படி,நேற்றிரவு 11.30 மணியளவில் வார்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காட்டுப்பன்றி அவர்களின் வாகனத்தில் மோதியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உட்பட 7 மாணவர்களும் பரீட்சை முடித்துவிட்டு,விருந்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Maharashtra | 7 students including BJP MLA Vijay Rahangdale’s son Avishkar Rahangdale died after their car fell from a bridge near Selsura around 11.30 pm last night. They (deceased) were on their way to Wardha: Prashant Holkar, SP Wardha
— ANI (@ANI) January 25, 2022