நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

Nalini, who was sentenced to life imprisonment in the Rajiv Gandhi murder case, has been given another 30-day extension of parole.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு மீண்டும் 30 நாள் பரோல் நீட்டிப்பு.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு மீண்டும் 30 நாள் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஜனவரி 27-ஆம் தேதியுடன் பரோல் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  கடந்த டிசம்பர் 27-ம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி அவரது தாயார் பத்மாவின் உடல் நிலையை காரணம் காட்டி 30 நாள் பரோலில் கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி வெளியே வந்தார். மேலும் 30 நாள் பரோல் நீட்டிக்க கோரி நனிளியின் தாயார் பத்மா தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, வழங்கப்பட்டுள்ளது.