#Breaking:மக்களே குட்நியூஸ்...3 லட்சத்திற்கு கீழ் சரிந்த கொரோனா பாதிப்பு!

#Breaking: Good news people ... Corona damage that fell below 3 lakhs!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்2,55,874  பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 614 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,97,99,202 ஆக உள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 3,06,064 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2,55,874 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 50,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,97,99,202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 614 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,90,462 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,67,753 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,70,71,898 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை22,49,335ஆக இருந்த நிலையில்22,36,842ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,62,92,09,308 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 62,29,956 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.