கர்நாடகாவில் இன்று 7,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 7,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 6,47,712 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 7,064 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், இதுவரை 5,22,846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது, மருத்துவமனையில் 1,15,477 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்ததால் இதுவரை, பலியானவர்களின் எண்ணிக்கை 9,370 ஆக அதிகரித்துள்ளது என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.