இமாச்சலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழப்பு.., பிரதமர் நிவாரணம் அறிவிப்பு ..!

இமாச்சல பிரதேச கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர் .
இமாச்சல பிரதேசத்தில் உள்ள கின்னார் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மலைகளில் இருந்து கீழே பாறைகள் உருண்டது. அப்போது டெம்போ டிராவலர் வாகனத்தில் 17 பேர் வந்தனர். மலைகளில் இருந்து கீழே உருண்ட பாறைகள் அந்த டெம்போ டிராவலர் வாகனத்தின் மீது விழுந்ததில், 9 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் பட்சேரி பாலம் இடிந்து விழுந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஜு ராம் ராணா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
#WATCH | Himachal Pradesh: Boulders roll downhill due to landslide in Kinnaur district resulting in bridge collapse; vehicles damaged pic.twitter.com/AfBvRgSxn0
— ANI (@ANI) July 25, 2021