கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் இந்தியாவில் 955 பேர் உயிரிழப்பு...!

In India, 43,071 people have been newly infected with corona in the last 24 hours. The death toll has been reported as 955 and the total number of casualties so far is 3,05,45,433.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 955 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  3,05,45,433 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட ஆயிரம் குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,05,45,433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 955 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,02,005 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 52,299 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,96,58,078 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,85,350பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 35,12,21,306 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.