இந்தியாவில் படிப்படியாக குறையும் தொற்று பாதிப்பு…! ஒரே நாளில் 38,740 பேர் டிஸ்சார்ஜ்..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,342 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 483 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,12,93,062 ஆக உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 35,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 6,041 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,12,93,062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 483 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,19,470 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,740 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,04,68,079 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,05,513 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாடு முழுவதும் இதுவரை 42,34,17,030 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 54,76,423 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025