தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27-ம் தேதி புதன் கிழமை இரவு கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தனர்.பின்னர் பிரியங்காவின் உடலை கட்டப்பள்ளி என்ற இடத்தில் உள்ள பாலத்திற்கு அடியில் உடலுக்கு தீ வைத்தனர்.
இந்த சம்பவம் நாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக முகமது ஆரிப் (26) , ஜொள்ளு சிவா (20), நவீன் (20), சின்னகேஷ்வலு(20) ஆகிய நான்கு பேரையும் போலீசார் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பிரியங்கா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு குற்றவாளி நான்கு பேரையும் போலீசார் அழைத்து சென்றனர். பொதுவாக குற்றவாளிகள் குற்றங்களை எப்படி செய்தார்கள் என்பதை போலீசாரிடம் விளக்க வேண்டும். இதை போலீசார் விசாரணை அறிக்கையில் சேர்ப்பார்கள்.
இதை தொடர்ந்து 4 பேரும் சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது அங்கு 6 போலீசார் சென்று உள்ளனர்.அப்போது நான்கு பேரும் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து தப்பி செல்ல முயன்று உள்ளனர்.இதனால் போலீசார் தற்காப்புக்காக நான்கு பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர். என்கவுண்டரில் கொல்லப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…
மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மணிக்கு 40 முதல்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…
சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…