150 சவரன் நகை.. BMW கார்… வரதட்சணை கொடுமையால் இளம்பெண் மருத்துவர் தற்கொலை.!

Published by
மணிகண்டன்

எத்தனை விழிப்புணர்வுகள், எத்தனை கடுமையான சட்டங்கள் , எத்தனை குற்றவழக்குகள், எத்தனை தற்கொலைகள் நிகழ்ந்தாலும், வரதட்சணை கொடுமை என்பது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதனால் மனமுடைந்து மணப்பெண் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த சம்பவத்தில் நன்கு படித்து சமூகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் ஈடுபடுவது தான் .

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார் 26 வயதான டாக்டர் ஷஹானா. இவரும் டாக்டர் ஈஏ ருவைஸும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது . இருவர் வீட்டிலும் இந்த விஷயம் தெரிந்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து வந்துள்ளனர்.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்… ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் நான்கு இந்தியர்கள்!

இளம்பெண் மருத்துவர் ஷஹானா தனது தயார் மற்றும் தனத 2 உடன்பிறப்புகளோடு வாழந்து வந்துள்ளார். தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். டாக்டர் ஈஏ ருவைஸ் வீட்டார், ஷஹானா வீட்டாரிடம் ,  150 சவரன் தங்க நகை, 15 ஏக்கர் நிலம் ஒரு BMW கார் ஆகியவற்றை வரதட்சணையாக தர வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இதனை கொடுக்க இயலாது என பெண் வீட்டார் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனை அடுத்து இந்த திருமணம் நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பெண் மருத்துவர் ஷஹானா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது சடலத்தை மீட்கையில் அங்கு ஒரு கடிதத்தில், “அனைவருக்கும் பணம் மட்டுமே தேவை” என்று எழுதப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கேரள காவல்துறையினர், டாக்டர் ஈஏ ருவைஸ் மீது,  தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  வரதட்சணையால் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ஷஹானாவின் மரணம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

6 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

7 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

7 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

9 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

9 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

10 hours ago