குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

Gujarat is set to go to the polls next year. Delhi Chief Minister has said that Aam Aadmi Party will contest in this Assembly election.

குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது.

இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என டெல்லி முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆமதாபாத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமாகிய அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், குஜராத் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என கூறியுள்ளார். டெல்லியில் மின்சாரம் இலவசம் என்றால் குஜராத்திலும் ஏன் அது சாத்தியப்படாது என மக்கள் நினைப்பதாக கூறியுள்ளார்.

மேலும், இதே போல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் என குஜராத்தில் கடந்த 70 ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றமும் அடையாமல் இருப்பதாகவும், இனி மாற்றங்கள் நிகழும் எனவும் தெரிவித்துள்ள அவர், டெல்லியில் உள்ளது போல அதே திட்டம் குஜராத்துக்கு கொண்டு வரப்படாது எனவும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பிரச்சினை உள்ளது அதற்கு ஏற்ப தீர்வு உள்ளது, அதை குஜராத் மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும், குஜராத் மக்களுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.