10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்லா மாநகராட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்!

10 ஆண்டுகளாக பாஜகவிடம் இருந்த, சிம்லா மாநகராட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.
ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லா மாநகராட்சித் தேர்தலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிம்லா மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 34 இடங்களில் 24 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதாவது, சிம்லாவில் 34 வார்டுகளில் 24 இடங்களில் காங்கிரஸ், 9 இடங்களில் பாஜக, ஒரு இடத்தில் மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றுள்ளது.
சிம்லா மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. சிம்லா மாநகராட்சித் தேர்தலி வாக்குப்பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒரு வருட கால தாமதத்திற்கு பிறகு சிம்லா மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது. குடிமை அமைப்பின் ஐந்தாண்டு பதவிக்காலம் ஜூன் 2022-இல் முடிவடைந்தது.
ஆனால், வார்டுகளின் எல்லை நிர்ணயத்தை எதிர்த்து நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் தேர்தலை நடத்த முடியவில்லை. இந்த நிலையில், சிம்லா மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் 24 இடங்களில் வெற்றி பெற்று, பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனிடையே, 68 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதில், பாஜக வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த நிலையில்,10 ஆண்டுகளாக பாஜகவிடம் இருந்த, ஹிமாச்சல் பிரதேசத்தின் சிம்லா மாநகராட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.
I thank the people of Himachal for their historical mandate to @INCHimachal in Shimla Municipal Corporation where elections were held on the party symbol after 10 years. Congress is reaching its highest ever tally in Shimla Muncipal Corporation. This mandate affirms the trust of…
— Sukhvinder Singh Sukhu (@SukhuSukhvinder) May 4, 2023