மணிப்பூரில் தொடர் கலவரம்... கண்டவுடன் சுட ஆளுநர் உத்தரவு.!

மணிப்பூரில் கலவரம் தொடர்ந்து வரும் நிலையில், வன்முறைக்காரர்களை பார்த்தவுடன் சுட உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

Manipur protest

மணிப்பூரில் கலவரம் தொடர்ந்து வரும் நிலையில், வன்முறைக்காரர்களை பார்த்தவுடன் சுட உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்டேய் என்ற  சமூகத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமூகத்தினரும் எதிர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டுள்ளது.

இந்த பேரணிக்கு எதிராக சில பகுதிகளில் எதிர் தரப்பும் பேரணி நடத்தியுள்ளனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்து, கலவரமானது. இரவில் நடந்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள் தீவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நகரமே தீப்பிடித்து எரிந்தது.

இந்த நிலையில் கலவரம் இன்னும் நீடித்து வருவதால், வன்முறையில் ஈடுபடும் நபர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை மணிப்பூர் மாநில ஆளுநர் வழங்கியுள்ளார். கலவரத்தை அடக்கும் நோக்கில் ஏற்கனவே 5 நாட்களுக்கு இணைய சேவை தடை மற்றும் 144 தடை உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

unknown node

Manipur Gov [ImageSource-ANI]