யூடியூப் வீடியோ பார்த்து, முடியை நேராக்க சிறுவன் செய்த விபரீத செயல்…! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…

தலை முடிக்கு மண்ணெண்ணை தடவி அதை தீப்பெட்டியை பயன்படுத்தி நேராக முயன்ற சிறுவன் உயிரிழப்பு.
இன்று சிறியவர்கள் வரை முதியவர்கள் வரை அனைவரின் கரங்களிலும் ஆண்ட்ராய்ட் போன்கள் தவழ்கிறது. இதில் இணையத்தில் தான் பலரும் உலா வருவதுண்டு. அந்த வகையில் யூடியூப் சேனல்களில் போடப்படும் சில வீடியோக்களை நம்பி பலரும் அதில் உள்ளவாறே தங்களது அழகை மெருகூட்டும் செய்கால்களில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் திருவனந்தபுரம் அருகே வெங்கனூரை சேர்ந்த சிவன் நாராயணன் என்ற 12 வயது சிறுவன் யூடியூப் சேனலை பார்த்து தலை முடியை நேராக்க முயன்றுள்ளார். இதற்காக அவர் தலை முடிக்கு மண்ணெண்ணை தடவி அதை தீப்பெட்டியை பயன்படுத்தி நேராக முயன்றுள்ளார். இதனால் சிறுவனுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளது. இச்சிறுவன் இந்த செயலை தனது பாட்டி மட்டும் வீட்டில் இருந்த நேரத்தில் செய்துள்ளார். அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025