2022 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை AIMIM அறிவித்தது!

The All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) has announced its chief minister candidate for the Uttar Pradesh Assembly elections.

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின்முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு, முதல் தொடக்கத்தில் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியினர் தற்பொழுதே தொடங்கிவிட்டனர். இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி அறிவித்துள்ளார்.

அதன்படி, இம்மாதத்தில் கட்சியின் இணைந்த கண் மருத்துவர் டாக்டர் அப்துல் மன்னன், உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2022 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, லக்னோவில் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை சந்தித்தார். இதன்மூலம் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தெரிகிறது.