கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 873 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 19 பேர் இறந்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.பல அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.
unknown nodeஎனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ரூ.25 கோடி பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.