திருமண ஊர்வலத்தில் முழுகவச உடையுடன் நடனமாடிய ஆம்புலன்ஸ் ட்ரைவர்...!

Video of ambulance driver Mahesh dancing along with his wedding procession outside the Susila Tiwari Medical College in Haridwar, Uttarakhand, has gone viral on the internet.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சுசீலா திவாரி மருத்துவ கல்லூரிக்கு வெளியே ஆம்புலன்ஸ் டிரைவர் மகேஷ் என்பவர் தனது மன அழுத்தத்தை போக்க திருமண ஊர்வலத்துடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இதில் முன்கள பணியாளர்களாக சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவர்களும் பணியாற்றுகின்றனர். இதில் மிகவும் முக்கியமானவர்களாக கருதப் படுபவர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள். எங்கு அழைத்தாலும் அழைத்த நேரத்திற்கு ஓடிச்சென்று உதவக்கூடிய மனம் கொண்டவர்கள் இவர்கள் தான்.

இந்த நிலையில்,  உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சுசீலா திவாரி மருத்துவ கல்லூரிக்கு வெளியே ஆம்புலன்ஸ் டிரைவர் மகேஷ் என்பவர் தனது மன அழுத்தத்தை போக்க திருமண ஊர்வலத்துடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நடனமாடும் வீடியோ வீடியோவை திருமணத்தில் கலந்துகொண்ட ஒருவர் வீடியோ எடுத்த நிலையில், தற்போது இது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. தொடக்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் தனித்து நடனமாடினார். சற்று நேரத்தில்,  அங்குள்ளவர்களும் சேர்ந்து அவருடன் நடனம் ஆடியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து டிரைவர் மகேஷ் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் 18 மணி நேர ஷிப்டுகளில் பணிபுரிந்து வருவதாக கூறினார். அவருக்கும் அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் ஒரு இடைவெளி தேவை என்றும், எனவே திருமண ஊர்வலத்தைக் கண்டதும், அவர்களுடன் சேர்ந்து நடனமாடியதாக கூறியுள்ளார்.

unknown node