மியான்மர் எல்லையில் விரைவில் தடுப்பு வேலி அமைக்கப்படும்… அமித் ஷா அறிவிப்பு!

Amit Shah

இந்தியாவுக்குள் சுதந்திரமாக நடமாடுவதை கட்டுப்படுத்தும் வகையில் மியான்மர் எல்லையில் தடுப்பு வேலி அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள சுமார் 5 கோடி மக்களை மட்டுமே கொண்ட சிறிய நாடு தான் மியான்மர். இதனால் சீனா, தாய்லாந்து, வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகளுடன் மியான்மர் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

இந்த சூழலில், மியான்மரில் கிளர்ச்சிப் படைகளுக்கும், ராணுவ ஆட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருவதால் பல நூறு மியான்மர் ராணுவ வீரர்கள் இந்தியாவுக்கு தப்பி வருகின்றனர். சமீபத்தில், மியான்மார் எல்லையில் இருந்து பல ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் உள்ள அசாம் மாநிலத்தில் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கே மோதல் போக்கும் அதிகரித்துள்ளது. இதனால் எல்லையில் பதற்றமான சூழலில் நிலவுகிறது. இந்த நிலையில், அசாம் மாநிலம் தேஜ்பூர், சலோனிபாரியில் எல்லை பாதுகாப்புப் படையான சஷாஸ்திர சீமா பாலின் (எஸ்எஸ்பி) 60வது எழுச்சி தினம் இன்று நடைபெற்றது. இதில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசியபோது, “இந்தியாவுக்குள் சுதந்திரமாக நடமாடுவதை கட்டுப்படுத்தும் வகையில் மியான்மர் எல்லையில் விரைவில் தடுப்பு வேலி அமைக்கப்படும் என அறிவித்தார்.

நிலமோசடி வழக்கு: ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை..போலீசார் குவிப்பு..!

இன மோதல்களில் இருந்து தப்பிக்க அதிக எண்ணிக்கையிலான மியான்மர் வீரர்கள் இந்தியாவிற்குள் தப்பி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. தொடர்ந்து பேசிய அமித்ஷா, மியான்மர் உடனான இந்தியாவின் எல்லை, வங்கதேச எல்லையை போல் பாதுகாக்கப்படும், நக்சல் அச்சுறுத்தலில் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு விடுபடும் என தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 600 மியான்மர் ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். எல்லையில் வேலி அமைப்பதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள சுதந்திர இயக்க ஆட்சியை (FMR) இந்தியா ரத்து செய்யும். இதனால், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்ற நாட்டிற்குள் நுழைய விசா தேவைப்படும் சூழல் உருவாகும். இந்தியா-மியான்மர் எல்லையில் 1970-களில் FMR கொண்டு வரப்பட்டது. இந்தியா எல்லையில் வேலி அமைக்கும் பட்சத்தில் FMR ரத்தாகி, விசா தேவை உருவாகும் என்றுள்ளனர்.

மேற்கு மியான்மரில் உள்ள ரக்கைனில் உள்ள அரக்கான் போராளிகள் ராணுவத்தின் முகாம்களைக் கைப்பற்றிய நிலையில், அவர்கள் மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். எனவே, அண்டை நாடுகளை சேர்ந்த வீரர்கள் திருப்பி அனுப்பப்படுவதை விரைவாக உறுதி செய்யுமாறு மிசோரம் அரசு மத்திய அரசை ஏற்கனவே வலியுறுத்திய நிலையில், மியான்மர் எல்லையில் தடுப்பு வேலி விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai