சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் கொடியேற்றுகிறார் அமித் ஷா ?

காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய கொடியேற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாநிலங்களவையில் அறிவித்தார்.அதில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது.மேலும் காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தற்போது தளர்வு செய்யப்பட்டு வருகிறது.தற்போது காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய கொடியேற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநகருக்கு அமித் ஷா செல்ல உள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025