#BREAKING: 12 -18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்..!

12 லிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் செலுத்த ஒப்புதல்
இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வந்தது. அதில், 2 முதல் 8 வரை , 8 முதல் 14 வரை, 12முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடத்தப்பட்டது.
இந்நிலையில், முதற்கட்ட பரிசோதனைகளில் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 12 லிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசியின் முதல் கட்ட சோதனையில் மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு நல்ல பலனை அளிக்கக் கூடியதாக இருந்துள்ளது. இதனால், பயோடெக் நிறுவனம் தனது தடுப்பூசி மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்த நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஓமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் 12 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சிறுவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025