இந்தியா – தென்னாபிரிக்கா இடையே நாளை டெஸ்ட் போட்டி..!

இந்தியா – தென்னாபிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலில் இரு அணிகளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர் முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நாளை நடைபெறுகிறது. செஞ்சூரியனில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ரஹானே, ஜெயந்த் யாதவ், ஹனுமா விஹாரி, பிரியங்க் பஞ்சால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்போட்டியில் அணியில் யார் இடம்பெறுவார்கள் என்பது நாளை தெரியவரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025