அர்னாப் கோஸ்வாமிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

The Supreme Court has granted interim bail to arnab goswami, who arrested in connection with the alleged suicide case.

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்வை நாயக் என்ற கட்டிட வடிவமைப்பாளர், கடந்த 2018 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மும்பை போலீசார், அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் வேனில் ஏற்றியது, பெரியளவில் சர்ச்சையானது. அவர் கைது செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து அர்னாப் கோஸ்வாமி, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அதனை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகக் கோரி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி மனுதாக்கல் செய்தார். அவரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றமும் மறுத்து, விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு, அர்னாப் கோஸ்வாமி மற்றும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது. தற்பொழுது இந்த இடைக்கால ஜாமீனை 4 வாரங்களுக்கு நீட்டித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.