மீண்டும் நிராகரிக்கப்பட்ட கெஜ்ரிவால் கோரிக்கை.! உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

Published by
மணிகண்டன்

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவை 7 நாட்கள் நீட்டிக்க கோரிய மனுவை விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த மே 10ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணமாக ஜூன் 1ஆம் தேதி வரையில் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து, ஜூன் 2ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு அளித்து இருந்தார். சிறுநீரக பிரச்சனை, திடீர் உடல் எடை குறைவு ஆகிய காரணங்களை சுட்டிகாட்டி ஜூன் 7ஆம் தேதி சரணடைய அனுமதிக்க வேண்டும் என்றும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய கோடைகால சிறப்பு உச்சநீதிமன்ற அமர்வு நேற்று குறிப்பிட்ட உத்தரவில் இதனை அவசர வழக்காக விசாரணை செய்ய முடியாது என்றும், ஏற்கனவே, கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிரான மனுவில் விசாரணை முடிந்து கோடை விடுமுறைக்கு பின்னர் தீர்ப்பு வெளியாகும் சூழல் உள்ளதால், தற்போது இதனை விசாரிக்க தேவையில்லை என குறிப்பிட்டது. இருந்தும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு இந்த கோரிக்கையை அனுப்பலாம் என கூறியிருந்தது.

இதனை அடுத்து, இன்று (மே 29) உச்ச நீதிமன்ற பதிவுத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு கோரிக்கை மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால், சிறப்பு நீதிமன்றத்தில் இந்த கோரிக்கையை கெஜ்ரிவால் தரப்பு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

12 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

13 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

14 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

14 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

15 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

15 hours ago