இந்திய பிரதமர் நரேந்திர மோடி அக்.7-ம் தேதி, ஜனநாயக ரீதியாக, அரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 19 ஆண்டுகள் நிறைவு பெற்று, 20-வது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார். இதனையடுத்து, அரசியல் பிரபாலங்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்வீட்டர் பக்கத்தில், இந்தி மொழியில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அந்த வகையில், எனக்கு நாட்டு நலனும் ஏழைகளின் நலனுமே முக்கியம் என்பதை நாட்டு மக்களுக்கு மீண்டும் உறுதிபட கூற விரும்புகிறேன் என்றும், எந்த ஒரு நபரும் தன்னிடம் குறைபாடுகள் இல்லை என்று கூறிக்கொள்ள முடியாது. நீண்ட காலமாக முக்கியமான, பொறுப்புள்ள பதவிகளில் நான் இருந்து கொண்டிருக்கிறேன், ஒரு மனிதனாக நான் கூட தவறுகள் இழைக்கக் கூடியவனே என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், என்னிடம் உள்ள குறைபாடுகளையும் மீறி என் மீதான மக்களின் நேயம் அதிகரித்து வருவது என் நல்லதிர்ஷ்டமே என்றும், உங்களது ஆசிகளும், அன்பும் நாட்டுக்கு சேவை செய்யும், ஏழைகளின் நலம் காக்கும், இந்தியாவை புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லும் உறுதிப்பாட்டை வலுவாக்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…