நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக காணொலி வாயிலாக கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக காணொலி வாயிலாக கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை முன்கூட்டியே தயாரிக்கும் வகையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டம் திமுகவின் அமைப்பு மற்றும் தேர்தல் உத்திகளை வலுப்படுத்துவதற்கு முக்கியமானதாக இருக்கும். மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடு, கட்சி அமைப்பு மாற்றங்கள், மற்றும் உறுப்பினர் சேர்க்கை போன்றவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025