சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக காணொலி வாயிலாக கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை முன்கூட்டியே தயாரிக்கும் வகையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. […]