இங்கிலாந்தில் பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை.!
கடந்த 2023ல் மரத்தை வெட்டிய கிரகாம், காருதெர்ஸ் இருவரும் அதனை வீடியோ ஆகவும் பதிவு செய்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4 ஆண்டுகள், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2023 செப்டம்பர் 28ஆம் தேதி இரவு டேனியல் கிரஹாம், ஆடம் கார்ருதர்ஸ் எனும் இருவர் ரம்பத்தை பயன்படுத்தி மரத்தை வெட்டியிருக்கின்றனர்.
மேலும், அதனை வீடியோ ஆகவும் பதிவு செய்திருந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், வடகிழக்கு இங்கிலாந்தின் நியூகேஸில் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, டேனியல் கிரஹாம், 39, மற்றும் ஆடம் கார்ருதர்ஸ், 32, ஆகிய இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் மற்றும் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மரத்தின் இழப்பு இயற்கைப் பாரம்பரியத்திற்கு ஈடுசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தியதாக நீதிமன்றம் குறிப்பிட்டது இதன் காரணமாக பிரிட்டிஷ் தண்டனை விதிகளின் கீழ், அவர்கள் செய்த குற்றத்திற்கான, குற்றவியல் சேதத்திற்கான சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம்.
இங்கிலாந்தின் நார்தம்பர்லேண்டில் உள்ள ஹாட்ரியன் சுவருக்கு அருகே அமைந்திருந்த சைக்காமோர் கேப் மரம் (Sycamore Gap Tree) சுமார் 200 ஆண்டுகள் பழமையானது மற்றும் இங்கிலாந்தின் முக்கிய இயற்கை அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.
இந்த சைக்காமோர் மரம், அதன் அழகிய தோற்றத்தாலும், தனித்துவமான இடத்தாலும் புகழ்பெற்றிருந்தது, மேலும் பல திரைப்படங்கள் மற்றும் புகைப்படங்களில் இடம்பெற்று சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது. 1991 ஆம் ஆண்டு வெளியான ‘ராபின் ஹூட்: பிரின்ஸ் ஆஃப் தீவ்ஸ்’ எனும் படத்தின் காட்சியிலும் இம்மரம் இடம்பெற்றிருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025