துணைத் தலைவர் மீது தாக்குதல், திரிபுரா கிரிக்கெட் சங்கத்தலைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு.!

TCA Prez

திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் செயலாளரைத் தாக்கிய புகாரின் அடிப்படையில், திரிபுரா மாநில கிரிக்கெட் சங்கத்தலைவர் உட்பட 5 பேர் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு.

துணைத்தலைவர் மற்றும் செயலாளரை தாக்கியதாக திரிபுரா கிரிக்கெட் சங்கத்தலைவர் தபன் லோத் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜோதிஸ்மன் தாஸ் சவுத்ரி கூறினார்.

விசாரணை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது, மேலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்புவோம் என்றும் காவல்துறை உதவி இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

ஏற்கனவே திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் தபன் லோத், 4 LED விளக்குகள் கொள்முதல் செய்ததில் நிதி மோசடி நடந்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்துமாறும் உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத அளவு 16 கோடிக்கு LED விளக்குகள் வாங்க செலவழிக்கப்பட்டது. 1 கோடி மட்டுமே இதற்கு செலவாகும் நிலையில் 16 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது, இதனால் இந்த கொள்முதலில் ஏதும் ஊழல் நடந்துள்ளதா என விசாரணை நடத்துமாறும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்