மாற்றுத்திறனாளிகளின் விபத்து நிவாரணத் தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு!

TNGovt

விபத்தினால் இறக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு. 

மாற்றுத்திறனாளிள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, விபத்தினால் இறக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கை அல்லது கால் இழப்பு, கண்பார்வை இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் கல்வி பயில வழங்கப்படும் வருடாந்திர உதவித்தொகையும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுளற்றது.

அதன்படி, மாற்றுத்திறனாளிகள் மகன், மகள் கல்வி பயில வருடாந்திர உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி பயிலும் மகன், மகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ,2,500 ஆகவும் உயர்த்தி தமீழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Disabled people
[Image Source : Twitter/@Nandhini_Twits]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்