மாணவர்கள் கவனத்திற்கு..! சிபிஎஸ்இ 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

இந்தியாவில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இடைநிலை கல்வி வாரியம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு (CBSE) 2022 -2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு நடத்தப்பட்டது. துணைத்தேர்வு எழுதிய 57,331 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த துணைத் தேர்வு முடிவுகள் cbseresults.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்களது பதிவெண்ணை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.