உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் இன்று (மே.14) பதவி ஏற்றார்.

BR Gavai

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்குப் பதிலாக நீதிபதி கவாய் நியமிக்கப்பட்டார்.

முன்னதாக கடந்த மாதம் 30 ஆம் தேதி, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி கவாய் நியமனம் தொடர்பான அறிவிப்பை சட்ட அமைச்சகம் வெளியிட்டது. ஏப்ரல் 16 அன்று, தலைமை நீதிபதி கன்னா அவரது பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.

நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுவதால், 6 மாதங்களுக்கு மட்டுமே தலைமை நீதிபதியாக பதவி வகிக்க உள்ளார் பி.ஆர். கவாய். வரும் நவம்பர் 23-ம் தேதி வரை அவர் இப்பதவியில் நீடிப்பார். நாட்டின் பௌத்த மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதி இவர் ஆவார்.

அதேபோல், 2-வது தலித் தலைமை நீதிபதியாகவும் உள்ளார். மகாராஷ்டிராவில் 1960-ல் பிறந்த இவர், ஐகோர்ட் நீதிபதி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 1985 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 2003 ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2005 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார் பி.ஆர்.கவாய்.  டிசம்பர் 2023 இல், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை ஒருமனதாக உறுதி செய்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்சிற்கு அவர் தலைமை தாங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்