முதல் முறையாக அணிவகுப்பில் பங்கேற்கும் வங்கதேச ராணுவம்..!

For the first time, 122 Bangladeshi soldiers participated in today's Republic Day team class ceremony. 50 years since the Bangladesh

இன்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் சற்றுநேரத்தில் டெல்லியில் தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது. இந்த குடியரசு தின விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பல மாற்றங்களுடன் குடியரசு தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர் இன்றி குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இந்த வருடம் 25 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. 15 வயதிற்கு உள்ள குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தின விழா அணிவகுப்பு தூரம் குறைக்கப்பட்டுள்ளது.

இன்றைய குடியரசு தின அணி வகுப்பு விழாவில் முதல் முறையாக வங்கதேச ராணுவ வீரர்கள் பங்கேற்கயுள்ளனர். வங்க தேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் 122 ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொள்கின்றனர்.