பாரத் பந்த் : டெல்லியில் 25 ரயில் போக்குவரத்து பாதிப்பு ...!

As many as 25 trains were reported to be stranded at the Delhi border today as farmers staged a full-scale protest across the country.

விவசாயிகள் இன்று நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருவதால், டெல்லி எல்லையில் 25 ரயில்கள் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு நவம்பர் முதல் விவசாயிகள் டெல்லியில் எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, மத்திய அரசு விவசாயிகளுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினாலும், அதில் எந்த ஒரு முடிவும் கிடைக்கவில்லை. வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவோம் என விவசாயிகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இன்று மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இருந்தது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து, ஆங்காங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் 25 ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.