பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத்தின் வளர்ச்சி பணிபுரிய ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் புதிய தலைமையின் கீழ் நோக்கி செல்ல வேண்டும். இதனை மனதில் வைத்து தான் பதவி விலகினேன் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, குஜராத்தில் இன்று மதியம் 3 மணி அளவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான நரேந்திர சிங் தோமர் கூறினார்.
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் நாளை பதவியேற்கிறார் ஜனதா கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்லோடியா தொகுதி பாஜக எம்எல்ஏவாக பூபேந்திர படேல் உள்ளார். குஜராத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்க உள்ளார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…