பீகாரில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறும் ஊசியை மட்டும் செலுத்தியுள்ளார் செவிலியர் ஒருவர்.
பீகார் மாநிலம் சப்ரா நகரில் கொரோனா தடுப்பூசி மையம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றுள்ளது. அந்த மையத்திற்கு இரு நண்பர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்துள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த நண்பர்களில் ஒருவர் செலுத்தும் போது மற்ற ஒருவர் அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஏனென்றால், அங்கு ஒருவருக்கு வெறும் மருந்தில்லாத ஊசியை செலுத்தியுள்ளனர். உடனே அவரது நண்பருக்கு தொடர்பு கொண்டு உனக்கு தடுப்பூசியே செலுத்தவில்லை, அதில் இருந்த தடுப்பூசியில் மருந்து இல்லை. காலியாக இருந்த ஊசி என்று தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அந்த நபர் தெரிவித்துள்ளார். வீடியோவில் தடுப்பூசி செலுத்தும் போது காலியாக இருந்த ஊசியை செலுத்தும் காட்சி பதிவாகியிருப்பது குறித்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
இதன் பிறகு விசாரணை நடத்திய அதிகாரிகள் இந்த செவிலியரை தற்போது தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், அந்த வெறும் ஊசி செலுத்தப்பட்ட நபருக்கு தடுப்பூசி மறுபடியும் செலுயுள்ளார்களா..? என்பதை பற்றி தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…