பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ 100.! டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பில் கேட்ஸ்.!

bill gates PM MODI

நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றும் மான் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோடிற்கு பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த, 2014ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி அன்று ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்று கிழமைகளில் பிரதமர் மோடி வானொலி வாயிலாக நாட்டுமக்களிடையே உரையாற்றும் மான் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

பிரதமரின் இந்த உரையானது நாட்டின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பபட்டு வருகிறது. வரும், ஏப்ரல் 30ஆம் தேதி அன்று மான் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சி  100 நிகழ்ச்சியாகும்.

இதற்கு உலக பணக்காரார்களில் மிக முக்கியமானவரான ஆப்பிள் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சுகாதாரம், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் தொடர்புடைய பிற பிரச்சனைகளில் மன் கி பாத் நிகழ்ச்சியானது சமூகம் தலைமையிலான நடவடிக்கையை ஊக்குவித்துள்ளது. இதன் 100வது எபிசோடிற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி (BJP) சார்பில், நாட்டின் பல்வேறு பகுதிகளில்  ‘மன் கி பாத் @100’ என்ற பெயரில் மனதின் குரல் 100வது நிகழ்ச்சியை கவுரவிக்கும் வகையில் தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்