2019-2020 நிதியாண்டில் அதிக சொத்துகள் மதிப்புள்ள கட்சிகளில் பட்டியலில் தேசிய அளவில் பாஜகவும், தமிழக அளவில் அதிமுகவும் முதலிடத்தில் உள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு(ADR ) ஆண்டுதோறும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெற்ற நன்கொடை, சொத்து மதிப்பை வெளியிடும். அந்த வகையில் 2019-2020 நிதியாண்டில் ஏழு தேசிய மற்றும் 44 பிராந்திய அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ,7 தேசிய கட்சிகளின் மொத்த சொத்துக்கள் ரூ.6,988.57 கோடி எனவும் 44 பிராந்திய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2,129.38 கோடியாக உள்ளது.
இதில், மத்திய ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, அதிகாரம் மட்டுமின்றி நிதி ரீதியாகவும் வலுவான சக்தியாக வலம் வருகிறது. தேசிய கட்சியான பாஜக-விடம் பெரும் நிதி உள்ளது. அதன் மூலம் நாட்டில் வேறு எந்த கட்சியாலும் முறியடிக்க முடியாத நிலையில் பாஜக உள்ளது. ரூ. 4,847.78 கோடி சொத்துகளுடன் பாஜக நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) ரூ. 698.33 கோடி (9.99 சதவீதம்) சொத்து இருப்பதாகவும், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ரூ 588.16 கோடி (8.42 சதவீதம்) சொத்து இருப்பதாகவும் அறிவித்துள்ளன.
மாநில காட்சிகளில் சமாஜ்வாடி கட்சி (SP) அதிகபட்சமாக ரூ.563.47 கோடி (26.46 சதவீதம்) சொத்து இருப்பதாகவும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ரூ. 301.47 கோடி என்றும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ரூ. 267.61 கோடி என்றும், திமுக (ரூ. 162.425 கோடி), சிவசேனா (ரூ. 148.46 கோடி) சொத்துக்கள் இருப்பதாகவும் அறிவித்துள்ளன.
அதே நேரத்தில் இதே காலகட்டத்தில் ஏழு தேசிய மற்றும் 44 பிராந்திய அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்பட்ட மொத்த கடன்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 44 மாநிலக் கட்சி மற்றும் ஏழு தேசிய கட்சிகள் சேர்த்து 2019-20 நிதியாண்டில் ரூ.134.93 கோடி நிதிச்சுமை உள்ளதாக தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் அதிகபட்சமாக ரூ.49.55 கோடியும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ரூ.11.32 கோடி கடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) அதிகபட்சமாக ரூ.30.342 கோடி (50.02 சதவீதம்), திமுக ரூ.8.05 கோடி (13.27 சதவீதம்) கடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2019-2020 நிதியாண்டில் அதிக சொத்துகள் மதிப்புள்ள கட்சிகளில் பட்டியலில் தேசிய அளவில் பாஜகவும், தமிழக அளவில் அதிமுகவும் முதலிடத்தில் உள்ளது.
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…