உண்மையான சமூக நீதியை வழங்கி வரும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுகிறது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இன்று பிரதமர் மோடி அவர்களின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் நிலையில், தமிழக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இணைந்து கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை அவர்கள் பாஜகவுக்கு செப்டம்பர் 17 மிக முக்கியமான நாள், இன்று பிரதமர் மோடியின் பிறந்த நாள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இன்று பல தலைவர்கள் பிறந்திருக்கலாம். ஆனால் உண்மையான சமூக நீதியை வழங்கி வரும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாட தான் பாஜக விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிற கட்சியினர் அவரவர் தலைவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் நாம் பார்த்து வளர்ந்த தலைவர் பிரதமர் மோடி என்பதால், அவருடைய பிறந்தநாள் அடுத்த இருபது நாட்கள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…