தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது - ராகுல் காந்தி!

தென்னிந்திய மக்களும் வடகிழக்கு பிராந்திய மக்களும் கவலைப்பட வேண்டாம். உங்கள் உரிமைகளை நாங்கள் பறிபோக விட மாட்டோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Hero Image

டெல்லி : தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய பாஜக அரசு இந்தியாவின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி மக்களவையில் ஆவேசமாகப் பேசியதாவது:“பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதா மூலம் இந்தியாவின் அரசியல் வரைபடத்தையே மாற்ற முயற்சிக்கிறது. தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பறிக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

தென்னிந்தியர்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்தச் செயலை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.”மேலும் அவர் கூறியதாவது:“தென்னிந்திய மக்களும், வடகிழக்கு பிராந்திய மக்களும் கவலைப்பட வேண்டாம். உங்கள் உரிமைகளை நாங்கள் பறிபோக விட மாட்டோம். ஒருபோதும் அதை அனுமதிக்க மாட்டோம்.” எனவும் தெரிவித்தார்.

ராகுல் காந்தி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அனைவரும் ஆதரிப்பதாகவும், ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மசோதா பெண்களுக்கானது அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.“மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாங்கள் அனைவரும் ஆதரிக்கிறோம். ஆனால், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதா பெண்களுக்கானது அல்ல. முந்தைய சட்டப்படி மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் நாங்கள் அனைவரும் ஆதரிக்கத் தயாராக உள்ளோம்” என்றார்.

அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது:“இந்த மசோதா பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களின் அதிகாரத்தைப் பறிப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளது. தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக அரசு முயற்சி செய்கிறது.”ராகுல் காந்தியின் இந்த ஆவேசப் பேச்சு மக்களவையில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியது. தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம் வலுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.