BJP-JD(S) : உறுதியான நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி.. குமாரசாமி கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கிய பாஜக.!

Former Karnataka CM HD Kumarasamy - PM Modi

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாநிலங்களில் வெற்றிப்பாதைக்கு வர பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த முறை கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த பின்னர் தென் இந்தியா முழுவதுமாக பாஜகவின் முகம் இறங்குமுகவே இருக்கிறது.

இதனை தவிர்த்து மீண்டும் தெம்புடன் செயல்பட பாஜக தயாராகி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென் தமிழகத்தில் பலமாக கூட்டணி அமைக்க பாஜக முயற்சித்து வரும் வேளையில், தற்போது ஓர் முக்கியமான அறிவிப்பை கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் இணைந்து மதசார்பற்ற ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது என்றும், இதற்காக, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா ஆகியோர் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கு பாஜக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக  கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு மதசார்பற்ற ஜனதாதள கட்சி மூத்த தலைவர் தேவகவுடா பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசித்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்