பாஜக ஆட்சி தப்புமா?! ஆதரவை திரும்பப் பெற்ற 9 எம்.எல்.ஏக்கள்.!

மணிப்பூர் சட்ட மன்றத்தில் பாஜக தனது 9 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்து உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வருகிறது. பாஜகவை சேர்ந்த பிரேன் சிங் முதல்வராக உள்ளார். இந்நிலையில், பாஜகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் தற்போது கட்சித்தாவலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பாஜகவை விட்டு பிரிந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
மேலும், பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்த 6 சுயச்சை எம்எல்ஏக்கள் தற்போது தங்கள் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் மணிப்பூர் சட்ட மன்றத்தில் பாஜக தனது 9 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்துள்ளது. இதனால் மணிப்பூரில் பாஜக ஆட்சி தப்புமா என கேள்வி எழுந்துள்ளது.