அதிர்ச்சி தகவல்.! திடீரென உயர்ந்த 2004 கொரோனா மரணங்கள்.! அதிகரித்த கொரோனா இறப்பு விகிதம்.!

Default Image

நம் நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2.9% இல் இருந்து 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. 5-வது நாளாக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உண்மையான கொரோனா மரணங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை, மரணங்களில் நிறைய தவறுகள் உள்ளது என்று கூறப்பட்டது.

சில கொரோனா  மரணங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று கூடுதலாக 2004 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரம் உள்ளது. அதில், மகாராஷ்டிராவில்தான் அதிகமாக 1328 மரணங்களும், டெல்லியில் 437 மரணங்கள் பதிவாகி உள்ளது.  மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் அதிகரித்ததால் கொரோனா இறப்பு விகிதம் 2.9% இல் இருந்து 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 5651 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். அதில், மும்பையில் மட்டும் 917 பேர்  பலியாகியுள்ளனர். இதேபோல் டெல்லியிலும் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 1904 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 11,903 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்