சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் 8ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகியது என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் கொரோனா காரணமாக இந்த வருடம், குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கட்டுப்பாடுகளுடன் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தற்போது தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 8ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!
July 3, 2025