ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் அருகிலுள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு வேலி மீது இன்று ஒரு பாகிஸ்தனை சார்ந்த ஒரு நபர் ஊடுருவ முயன்றபோது எல்லை பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் வேலியைக் கடந்து மறுபுறம் சென்றபோது வீரர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, அவர் ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார். பின்னர், அந்த பகுதியைத் தேடியபோது அந்த நபர் இறந்து கிடந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் அதிகாலை 1 மணியளவில் எல்லையில் உள்ள பகாசர் பகுதியில் நடந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
நாட்டில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு எல்லை பாதுகாப்பு படை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஊடுருவ முயன்ற நபரை அடையாளம் காணுமாறு பாக்கிஸ்தான் ரேஞ்சர்களிடம் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கேட்டுள்ளது என்றும், பாகிஸ்தான் பதிலளித்த பின்னர் அவர் குறித்து மேலும் விவரங்கள் கிடைக்கப் பெறும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பாக்கிஸ்தான் தரப்பில் நடமாட்டத்தை எல்லை பாதுகாப்பு படை கவனித்து வருகிறது என கூறினார்.
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…