எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைப்பு.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி இன்று 6வது நாளாக நடைபெற்று வருகிறது. இருந்தும் 6 நாட்களாக தொடர்ந்து இரு அவைகளிலும் தொடர் அமளி ஏற்படுவதால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
அதே போல , ஏற்க்கனவே, மக்களவை எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மாநிலங்களவையிலும் தொடர் அமளி காரணமாக பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அவை தலைவர் ஜன்தீப் தன்கர் அறிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றம் வந்தனர்.