தமிழகம் போல தெலுங்கானாவில் துவங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டம்.!

அரசு தொடக்கப்பள்ளி பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்டமானது கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாகாணத்தில் தொடங்கி வைத்த இத்திட்டம், அடுத்து படிப்படியாக தமிழகம் முழுக்க செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் தமிழகம் முழுவதும் காலை உணவு சிற்றுண்டி திட்டம் அரசு தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட இந்த திட்டமானது கட்சிகள் பேதமின்றி, மாநிலம் கடந்த பாராட்டுகளை பெற்றது.
முன்னதாக தெலுங்காளவில் இந்த திட்டத்தை செயல்படுத்த தெலுங்கான அரசு அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து, காலை சிற்றுண்டி திட்டம் குறித்தும், அதன் செயலாக்கம் குறித்தும் ஆய்வு செய்தனர். அதன் பிறகு தெலுங்கானாவில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.
இதற்காக ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரையில் ஆண்டுக்கு செலவிடப்படும் என அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. வரும் அக்டோபர் 24 தசரா பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் துவங்கப்படும் என அம்மாநில தலைவர் அறிவித்து இருந்த நிலையில் இன்று முதற்கட்டமாக காலை சிற்றுண்டி திட்டம் தெலுங்கானாவில் துவங்கிப்பட்டுள்ளது.