enforcement-directorate
கனரா வங்கி ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாக சிபிஐ-யிடம் புகார் அளித்தது. இதனை எடுத்து இந்த புகார் தொடர்பாக இந்த நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா உட்பட ஐந்து பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நரேஷ் கோயல் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலில் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், நேற்று மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நரேஷ் கோயலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இதனை தொடர்ந்து தற்போது, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.538 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பண பரிமாற்ற தடுப்பு திட்டத்தின் கீழ் அமலாக்க துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, 17 அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்தியா துபாய் லண்டன் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…